பார்வையற்றோர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்
பார்வையற்றோர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்
பார்வையற்றோர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்
ADDED : மே 30, 2010 03:14 AM
அருப்புக்கோட்டை : பார்வையற்றோர் பிரிவில் அருப்புக்கோட்டை மாணவர் ஹரி கிருஷ்ணன், 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அருப்புக்கோட்டை அல் - அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் ஹரி கிருஷ்ணன்; விருதுநகரைச் சேர்ந்தவர். இவர் தந்தை சுந்தரம், தாயார் சுமதி சிறிய ஓட்டல் நடத்தி வருகின்றனர். பார்வையற்ற ஹரி கிருஷ்ணன், பாடங்களை பிரெய்லி முறையில் கற்று, டேப்பில் பதிவு செய்து, அதை கேட்டு படித்து வந்தார். பத்தாம் வகுப்பில் தமிழில் 91, ஆங்கிலம் 91, கணிதம் 96, அறிவியல் 97, சமூக அறிவியல் 97 என மொத்தம் 474 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பெற்றார்.
இவர் கூறியதாவது: அதிகாலை 5 மணிக்கே எழுந்து 8 மணி வரை, மாலை 6 முதல் 10 மணி வரை படிப்பேன். படிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் செய்து கொடுத்தனர். பிற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் தான் எங்களை போன்றோருக்கும் வழங்கப்பட்டது. ஆனால், கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதித்தனர். இவ்வாறு ஹரி கிருஷ்ணன் கூறினார்.